ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர். ஆசாம்கான் தலைமை வகித்தார்.

செயலாளர் ஜெபசிங், பொருளாளர் முனிரத்தினம், துணைத் தலைவர் சங்கீதா ஸ்ரீ, துணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், உள்ளிட்டோர்கள் பேசினர்கள்.
கூட்டத்தின்போது, பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து மனு வழங்குவது என முடிவு
செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாக பொம்மிடி வழியாக இயக்கப்படும ் ஈரோடு- ஜோலார்பேட்டை பயணி கள் ரயில் காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து காலதாமதமாக
இயக்கப்படுவதை கண்டித்தும், பொம்மிடி ரயில்
நிலையத்தில் 4-வது நடை மேடை அமைக்க வலியுறுத்தியும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடர் காலதாமதத்தை கண்டித்தும், தொடர்ந்து கூடுதல் ரயில் நிறுத்த கோரிக்கைகள். புறக்கணிக்கப்படுவதை எதிர்த்தும், வரும் 13-ம் தேதி பொம்மிடி ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்
பட்டது. மேலும், மைசூர் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில் பொம்மிடி நிலையத்தில் நின்று செல்லவும், பெங்களூருவில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலம் வரை விரைவு பயணிகள் ரயில்இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி பெங்களூர் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் மனு அளிப்பது
எனவும் முடிவு செய்யப்
பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed