மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி ஜூன் 8 –
தென்காசி மாவட்டம் இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இயற்கையின் ஆர்ப்பரிப்புகள் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து வருகிறது தற்போது மழையும். சாரலும் வெயிலுமாக சீதோசன நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் சூழலை அனுபவித்தவாறு கண்டு வருகின்றனர்
இந்நிலையில் பொதிகை மலையில் கிடைக்கக்கூடிய மூலிகைகள் அரிய வகை பழங்கள் ஆன ஸ்டார் பழம் ரம்டான் மங்குஸ்தான் அயனி பலா முட்டை பழம் நாவல் கனி துரியன் பழம் முள் சீத்தா மற்றும் ஏராளமான பல வகைகள் குற்றால பகுதிகளில் வியாபாரிகள் அதிக அளவில் குவித்து வைத்துள்ளனர்
இதனால் இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் உடலுக்கு ஆரோக்கியம் என்ற நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்களை விரும்பி வாங்கி வருவது வியாபாரிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது . தற்போது சீசன் தொடங்கிய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சுகாதார செயல்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .