கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் நலச் சங்கத்தின் சார்பில், கோவை மாவட்ட டாஸ்மாக் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது.

மாநில தலைமை ஒருங்கினணப்பாளர் சுந்தரவளவன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில்,
மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராசன் தலைமை தாங்கினார்..

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜ்னி ராதிகா முன்னிலை வகித்தார்..

கூட்டத்தில்,குழு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்..

இதில்,டாஸ்மாக் ஊழியர்களின் நலன், உரிமைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, டாஸ்மாக் ஊழியர்களை அதிகளவில் சங்கத்தில் இணைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், டாஸ்மாக் துறையுடன் தொடர்புடைய அனைத்து சங்கங்கள் மற்றும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பொதுவான கோரிக்கைகள் மற்றும் ஊழியர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக இணைந்து செயல்படும் வலுவான ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மேற்கொள்வது, அனைத்து டாஸ்மாக் சங்கங்களையும் ஒரே தளத்தில் இணைத்து செயல்படுவது, ஊழியர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,சம்பத் குமார்,நஞ்சன்,சலீம், மாணிக்கராஜ்,விஸ்வநாதன்,செந்தி்ல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *