தஞ்சாவூர்: தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் உழவன் டாக்டர் அருணா அஜீஸ் கண்ணன்,அவர்கள்அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு, அவரது முழு ஆதரவு தெரிவித்தார்.பிறகு அவர் பேசியதாவது அண்ணாமலை ஐபிஎஸ் இருந்து விலகி பிஜேபி மாநில தலைவர் ஆனார்.என் மண் என மக்கள் யாத்திரை தொடங்கிய பல இடங்களில் சுற்று பயணம் செய்தார்.இளைஞர்களை BJP-க்கு ஈர்த்தது.தமிழ்நாட்டில் BJP-க்கு கள அளவில் அடையாளம் கொடுத்தார்.
சமூக ஊடகங்களில் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கினார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், தமிழக விவசாயிகளின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளின் போது அவர் களத்திற்குச் சென்று அவர்களின் குரலாக ஒலித்தார்:.
மேலும்டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள சிரமங்கள், உர தட்டுப்பாடு, மற்றும் பயிர் சேதம் குறித்து விவசாயிகளிடம் பேசி அரசுக்குத் தெரியப்படுத்தினார்.
விவசாயிகளின் இடுபொருள் செலவு, விளைபொருளுக்கான உரிய விலை மற்றும் மின்சாரப் பிரச்சனைகள் குறித்து அரசை வலியுறுத்தி பலமுறை விரிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.எங்கள் சங்கம் அவருக்கு முழு ஆதரவும் கொடுக்கும் என சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து விரைவில் அண்ணாமலை சந்திப்போம் எனக் கூறினார்