தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் இருசக்கர வாகனத்தை இயக்கி ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
தமிழக அரசு தமிழகத்தில் விபத்தில்லா தமிழ்நாடு நடைபெற அனைவரும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிய வேண்டும் மேலும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் அனைத்து காவலர்களும் ஹெல்மெட் அணிந்து ஊர்வலம் ஆக சென்றனர்

இந்த ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் சர்வேஸ்வரன் சிறப்புஉதவி ஆய்வாளர் கண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இதில் ஆய்வாளர் ராமச்சந்திரன் 50க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக பூக்கடைக்காரர் வடதாரை ஐடிஐ கார்னர் பஸ் நிலையம் பொள்ளாச்சி சாலை டி எஸ் கார்னர் வழியாக பைவு கார்னர் வழியாக காவல் நிலையத்தை வந்து அடைந்தனர்

இதில் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இரு சக்கர வாகன ஊர்வலத்தில் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இது அறிந்த தாராபுரம் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர்களை பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *