C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மீன் பிடிக்க சென்று படகு பழுது காரணமாக கடலில் தத்தளித்த 3 நபர்களை மீட்ட 4 மீனவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கடந்த 03.03.2026 அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று படகு பழுதின் காரணமாக கரை திரும்பாமல் கடலில் தத்தளித்த 3 மீனவர்களை பத்திரமாக மீட்டு வந்த 4 மீன்வர்களுக்கு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்  பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் இந்திர நகர் மீனவர் கிராமத்தை சேர்ந்த வீரவேல் என்பவரின் சொந்த படகில் ரமேஷ், மனோகர் மற்றும் நாகவேல் ஆகிய 3 மீனவர்களும் 03.03.2026 அன்று மீன்பிடிக்க அண்ணன் கோயில் மீன் பிடி இறங்குதளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் 04.06.2026 அன்று கரை திரும்பி இருக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்களது படகு அண்ணன் கோயில் மீன் பிடி இறங்குதளத்தில் இருந்து 19 நாட்டிகல் தூரத்தில் அவர்களது படகு பழுது ஏற்பட்டு கடலில் நின்று விட்டது. இவர்கள் கரை திரும்பாத தகவல் கிடைக்க பெற்றவுடன் உள்ளூர் மீனவர்கள் மூலம் கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது.


கடலில் ஏற்பட்ட காற்றின் காரணமாக கடலின் வடக்கு பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி எல்லை பகுதியான நல்லவாடு பகுதியில் படகு இருந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து சோணாங்குப்பம் சதிஷ் என்பவரது மீன்பிடி படகு மூலம் தினகரன், பிரபா,செந்தில் என 4 பேர் கடலில் மீன்பிடிக்க சென்ற பொழுது நல்லவாடு பகுதியில் பழுதான படகு இருப்பதனை பார்த்து அருகில் சென்று விசாரித்துள்ளனர்.அவர்களது படகு பழுதாகி நிற்பதனையும் 3 மீனவர்கள் உணவின்றி சோர்வாக இருத்தனை அறிந்து மீன்வளத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களை அழைத்து வரும்படி தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சோணாங்குப்பம் சதிஷ் என்பவரது மீன் பிடி மூலம் அழைத்து வரப்பட்டனர். மீட்க பட்ட 3 மீனவர்களும் உடனடியாக108 அவசரசிகிச்கை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

மீன்பிடிக்க சென்று பாதிப்படைந்த மீனவர்களை கண்ட உடன் முதலுதவி அளித்து மீட்டு வந்த மீன்வர்களான சதிஷ், தினகரன், பிரபா,செந்தில் ஆகியோர்களின் நற்செயலுக்கு  பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர்

சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் சு.தில்லைராஜன்,உதவி  இயக்குநர்கள் திருமதி ப.ரம்யலட்சுமி, திருமதி அ.நித்யபிரியதர்ஷினி, திருமதி தி.அஞ்சனாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *