குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் சி. சிவசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பொங்கலூர் தலைமைக் கழக பேச்சாளர் மணிகண்டன் மாநில அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ், குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வேங்கை ஹரிஹரமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற தலைவர் வேங்கை மதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர்.

சூரியநல்லூர், கொழுமங்குழி, கண்ணாங்கோயில், சிறுகிணறு, புங்கந்துறை மற்றும் சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இச்செயல்வீரர்கள் கூட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் தீவிரமாக பணியாற்றி அதிமுக வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *