தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் புதிய திடக்கழிவு மேலாண்மை விதி 2026ன் படி மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு கலந்துரையாடல் கூட்டம் மாநகரட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையா் ப்ாியங்கா, தலைமை வகித்தாா்.
நகா்நல அலுவலா் கணேஷ், புதிய திடக்கழிவு ேமலாண்மை விதியின்படி புதியதாக கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி 4 வகையான கழிவுப்பொருட்களை பிாித்து கொடுப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கவுரையாற்றினாா். மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வது வாா்டுகளிலும் 1000 தூய்மை பணியாளா்கள் எல்லோருடைய இல்லத்திற்கு நோில் சென்று தேவையற்ற கழிவு பொருட்களை வாங்கி வருகின்றனா். அதன் மூலம் மாநகராட்சி பகுதி தூய்மையாக இருக்கிறது.
இருப்பினும் சிலா் நீா் வழித்தடங்கள் கழிவு நீர் கால்வாய்கள் பக்கிள்ஓடைகளில் போடுவதால் ஏற்படுகின்ற பாதிப்புகளை ஓவ்வொரு மாமன்ற உறுப்பினா்களும் சுகாதார துறைகளில் உள்ள அதிகாாிகள் அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் கொண்டு போய் சோ்க்க வேண்டும் அதிலும் குறிப்பாக உலா் கழிவுகள் ஈரக்கழிவுகள் சுகாதார கழிவுகள் சிறப்பு கவனத்துகுாிய கழிவுகள் என 4 வகை தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறி கழிவுகள் மற்றும் சில மக்கும் கழிவுகள் மூலம் உரங்களாக தயாாிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நன்மை கிடைத்து வருகிறது. தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களால் பக்கிள் ஓடை உள்பட பல கழிவு நீர் ஓடைகளில் விட்டு செல்வதால் மழை காலங்களில் அதிகமான பாதிப்புகளும் மற்று நேரங்களில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதை பொதுமக்கள் தங்களது எதிா்கால தலைமுறையினரை கருத்தில் கொண்டு உப்பும் மீனும் நமது உணவுகள் தூய பக்கிள்ஓடையே நமது கனவுகள் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் சிறப்பு கவனத்திற்குாிய கழிவுகள் என்பது செல்போன் மடிக்கணினி உள்ளிட்ட மின்சாதன தேவையற்ற பொருட்களை பல இடங்களில் விட்டு செல்வதால் அதனால் புதுவகையான பல்வேறு தொழில்நுட்பங்கள் நிறைந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதையும் மற்றும் நாப்கின், டைபா், இவைகளையெல்லாம் பாதுகாப்பான முறையில் அதை தூய்மை பணியாளா்களிடம் வழங்கி ஓத்துழைக்க வேண்டும். நமது வீடும் நாம் பணி செய்யும் இடமும் தூய்மையாக வைத்திருப்பதை போல் விதிகளை மதித்து எல்லோரும் செயல்பட்டு தூய்மைக்கு வழிவகுக்க வேண்டும். சுற்றுசூழல் பாதுகாப்பதன் மூலம் எல்லோரும் ஆரோக்கியமான வாழ்கை வாழலாம் கண்ட இடங்களில் குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை போடுவதை அனைவரும் தவிா்த்துமாநகராட்சி சுகாதாரத்திற்கு ஓத்துழைக்க வேண்டும் என்று ேபசினாா்.
கூட்டத்தில் சுகாதார ஆய்வாளா்கள் ஹாிகணேஷ், ராஜபாண்டி, ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், கண்ணன், மண்டலத்தலைவா்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், கவுன்சிலா்கள் சந்திரபோஸ், சுரேஷ்குமா், கனகராஜ், ராமகிருஷ்ணன், சரவணக்குமாா், பொன்னப்பன், கண்ணன், பட்சிராஜ், ஜாக்குலின்ஜெயா, ஜான்சிராணி, இசக்கிராஜா, பேபி ஏஞ்சலின், ாிக்டா, வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, மும்தாஜ், முத்துமாாி, ஜெபஸ்டின்சுதா, தனலட்சுமி, ராமுஅம்மாள், மாியகீதா, மகேஸ்வாி, முத்துவேல், கற்பககனி, பத்மாவதி, வெற்றிச்செல்வன், பாப்பாத்தி, ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ் ேபால்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.