நேற்று மாலை திருவொற்றியூர் கடலில் தனது சகோதரிகளுடன் குளித்து கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞர் ஐசக் வயது 19 இவரை திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் எண்ணூர் தீயணைப்பு துறையினர் மிதவைகளை வைத்துக்கொண்டு 20 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது தொண்டர்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் பைபர் படகின் மூலம் திருவெற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து எண்ணூர் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சென்று தேடும் பணியில் ஈடுபட்டார் அதே போன்று இன்னொரு படகில் மீனவர்களும் தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோன்று மாயமான இளைஞரின் உறவினர்களும் கடல் கரையில் அமர்ந்து கண்ணீர் மல்க அழுது அவர்களும் தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதி மிகுந்த சோகமாக காட்சியளிக்கிறது