செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் தபால் பெட்டி, எம். ஆர். எச். சாலையில் சி. எஸ். ஐ.அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், பொது மருத்துவம், எலும்பியல், கண் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளும் உடல் நலத்திற்கான பரிசோதனைகளும் சிறந்த மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது .
இந்த முகாமில், மெரீடியன் மருத்துவமனை சேர்மன் அந்தோணி ரத்தினம், ரெவரென்ட் வட வட்டார தலைவர் ஸ்டீபன் சாமுவேல்,மாதவரம் குருசேகரம் ரெவரென்ட் இம்மானுவேல் ஈஸ்டர் ராஜன்,
சி.எஸ்.ஐ., அருள் ஆலயத்தின் செயலாளர் சார்லஸ் சாந்தகுமார், பொருளாளர் ஏசுதாஸ் மற்றும் பொன்டேவிட் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.