மன்னார்குடி., ஜூலை. 24

நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்தியக்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்லூரி மாணவர்கள் 2500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கல்வித் துறையில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக கோரி கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத்தலைவர் KRJ.பாரதிசெல்வன் மாவட்டப்பொருளாளர் க.கோபி மற்றும் மாவட்ட நிர்வாகி அரவிந்த் கல்லூரி நிர்வாகிகள் கங்காதரன், நித்தீஸ், சந்தோஷ், கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *