மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
செங்கோட்டை : ஜூன் – 9
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2025-26 ஆம் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்பில் பயின்று அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் எம். நியாஸ் NjsR ஆலோசனையின் பேரில் செங்கோட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட்பணி ஜோ.விசுவாச ஆரோக்கியராஜ் அடிகளார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் A.ஆரோக்கியராஜ் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ட. பரமசிவன் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஜெயா 559 /600,இரண்டாமிடம் பெற்ற மல்லிகா 525 / 600,மூன்றாமிடம் பெற்ற பரத்ராஜ் 505/600,மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மணிகண்டன் 487 /500,இரண்டாம் இடம் பெற்ற அபிநயா 480 /500,மூன்றாம் இடம் பெற்ற வைஷ்ணவி 478/500, மற்றும் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற கீர்த்தனா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை கிழக்கு ஒன்றியம் வல்லம் கிளையை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் டேவிட் சுரேஷ் மணிகண்டன் ராஷித், தங்கமணி, இஸ்மாயில், மைதீன், ரமேஷ் கண்ணா, கோபால்