தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக குமுளி போடிமெட்டு, கம்பம் மெட்டு மலை சாலை ஆகிய வழித்தடங்கள் மூலம் கேரள மாநிலத்திற்கு செல்ல முடியும். இதில் கம்பம் கம்பம் மெட்டு சாலை 13 கீமீ தூரத்தில் கேரளாவை இணைக்கிறது

மேலும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உங நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன மேலும், கேரள மாநில மக்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர கம்பம் மெட்டு சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கம்பம் மெட்டு சாலையில் சுமார் 65 மீட்டர் தூரத்திற்கு சாலை முழுவதும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர் இதனைத் தொடர்ந்து, சாலையை சீரமைத்து புதுப்பிக்கும் பணிக்காக தமிழக அரசு ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி, கம்பம் மெட்டு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது, சாலைப் பணிகளை முடிக்க ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளீர்கள்.

அந்த காலக்கெடுவிற்குள் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும்” என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் பின்னர் செய்தியாளர் களிடம் ஜெகநாத் மிஸ்ரா கூறியதாவது
“சாலைப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தமிழகப் பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் குமுளி மலைச்சாலை வழியாக நீண்ட தூரம் பயணித்து ஏலக்காய் தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

எனவே, கம்பம் மெட்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார் இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *