கோயம்புத்தூர், ஜூன் 10, 2026:

வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் இந்தியா முழுவதும் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு பல்வேறு சி.எஸ்.ஆர் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 11 மாநிலங்களில் 56 சி.எஸ்.ஆர் திட்டங்கள் மூலம் சுமார் 78,000 பயனாளிகள் பயன்பெற்றுள்ள நிலையில், மொத்தமாக ரூ.7.13 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வி-கார்டு இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் வி-கார்டு அறக்கட்டளையின் இயக்குனரான டாக்டர் ரீனா மிதுன் சிட்டிலப்பிள்ளை கூறியதாவது, எங்கள் சி.எஸ்.ஆர் அணுகுமுறை தனிப்பட்ட உதவிகளைத் தாண்டி நீண்டகால நிலையான மாற்றத்தை உருவாக்கும் சூழலை உருவாக்குவதாகும். அடிப்படை கல்வியை வலுப்படுத்துவது, சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவது அல்லது திறன் மேம்பாட்டின் மூலம் சமூகங்களை முன்னேற்றுவது என எங்கள் அனைத்து முயற்சிகளும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தொடர்ந்து சமூக அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்ற நம்பிக்கையால் வழிநடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, நம் ஊரு பள்ளி” (NSNOP) திட்டத்துடன் இணைந்த “நம் பள்ளி திட்டம்” சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை வி-கார்ட் மேம்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், சமூக பங்களிப்பு மற்றும் சி.எஸ்.ஆர் கூட்டாண்மைகளை ஊக்குவித்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் சூழல் கிடைக்க வேண்டும் என்பது வி-கார்டின் நம்பிக்கை. நம் பள்ளி திட்டத்திற்கு எங்களின் ஆதரவின் மூலம், பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதில் பெருமை கொள்கிறோம், என்று டாக்டர் ரீனா மிதுன் சிட்டிலப்பள்ளி கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள வி-கார்ட் எலக்ட்ரோமெக்கானிக்கல் பிரிவிற்கு அருகிலுள்ள கரையம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் சுமார் 150 மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறையை சரிசெய்ய புதிதாக 607 சதுர அடி வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், கோவை கே.ஜி. சாவடியில் உள்ள வி-கார்ட் வயர்ஸ் & கேபிள்ஸ் பிரிவிற்கு அருகிலுள்ள ரங்கசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 735 சதுர அடி பரப்பளவில் புதிய வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு வகுப்பறை திட்டங்களும் தமிழக அரசின் “நம் பள்ளி திட்டம்” மூலம் செயல்படுத்தப்பட்டன.

மேலும், ஈரோடு பெருந்துறையில் உள்ள வி-கார்ட் சோலார் பிரிவிற்கு அருகிலுள்ள பள்ளிகளில் சுகாதார கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 844 மாணவர்கள் பயிலும் சீனாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் 305 மாணவர்கள் பயிலும் சென்னிமலை முகாசிபிடாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் புதிய கழிப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் சுகாதாரம் மற்றும் கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளி கட்டமைப்பு திட்டங்களுக்கு மொத்தமாக ரூ. 55 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் “பில்ட் இந்தியா” முயற்சிகளின் கீழ், பிச்சனூரில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதுடன், சாவடி தொழிற்சாலை அருகிலுள்ள ஜே.ஜே. நகர் பகுதியில் குளம் புதுப்பிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த குளம் சீரமைப்பு திட்டம் நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் விவசாயத்திற்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

மேலும், மாவுத்தம்பதி ஊராட்சிக்கு குப்பை சேகரிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் சிறப்பு வடிவமைப்பில் மின்சார தள்ளுவண்டி வாகனமும் வழங்கப்பட்டது.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ஒடிசா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான சி.எஸ்.ஆர் முயற்சிகள் மூலம், 2025-26 நிதியாண்டில் வி-கார்ட் தனது நிறுவன மதிப்புகளை சமூக முன்னேற்ற நடவடிக்கைகளாக மாற்றி, இந்தியா முழுவதும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *