இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் UMT ராஜா என்ற கலைஞர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மெழுகு திரியிலிருந்து வெளிவரும் இருள் புகையைக் கொண்டு, அந்த மாபெரும் கலைஞரின் ஓவியத்தை அவர் வரைந்துள்ளார். “இமயம் இருண்டது, இமயம் சரிந்தது” என்ற வாசகத்தோடு, எரியும் மெழுகு திரியின் கரும்புகையில், தூரிகை (Brush) அல்லது பென்சில் என எதையும் பயன்படுத்தாமல், ஒரு சிறிய குச்சியை மட்டுமே கொண்டு பாரதிராஜாவின் உருவத்தை அவர் தீட்டியுள்ளார்.
ஒரு சிறிய கலைஞன் என்ற முறையில், மறைந்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்குத் தன் தீப அஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலியை இதன் மூலம் செலுத்தியுள்ளதாக UMT ராஜா தெரிவித்துள்ளார்.