தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காணாமல் போன 11-செல் போன் மீட்பு. உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர்.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் கை பேசியை (செல்போன்) தவறவிட்டவர்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில்,தாராபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

செல்போன் தவறவிட்டவர்கள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் சந்தேகத்திற்கு உறிய நபர்கள் என தீவிர தேடுதலுக்கு பிறகு 11 செல்போன்கள் கண்டுபிடிக்க பட்டு தாராபுரம் காவல் நிலையத்தில் செல்போன் தவறவிட்டவர்களை நேரில் வரவழைத்து தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். செல்போனை பெற்றுக் கொண்டவர்கள் தாராபுரம் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *