கோயம்புத்தூர், தமிழ்நாடு:
கோவை, நோவா IVF கருத்தரித்தல் மையத்தின் கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர்களின் கூற்றுப்படி – குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வரும் பத்தில் மூன்று நோயாளர்களுக்கு கருவுறுதல் தொடர்பான சிக்கல்களுடன் சேர்த்து நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது தைராய்டு பிரச்சினைகள் உள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மருத்துவ நிலைமைகள் அத்தம்பதிகள் குழந்தை பெறுவதை நேரடியாக கடினமாக்குகின்றன.
ஆண் மலட்டுத்தன்மை என்பது கோயம்புத்தூரில் பலருக்கு ஒரு பெரிய கவலையாக மாறி வருகிறது. மன அழுத்தம் நிறைந்த நீண்ட நேர வேலைகள், தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த சர்க்கரை அளவு ஆகியவை விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதற்கான சில காரணங்களாகும். இருப்பினும், பெரும்பாலான ஆண்கள் மலட்டுத்தன்மை சார்ந்த பிரச்சினைகளை ஒப்புக்கொள்வதில்லை. ஒன்று அவர்கள் பரிசோதனை செய்து கொள்வதை தாமதப்படுத்துகிறார்கள் அல்லது அதை முற்றிலுமாக தவிர்க்கிறார்கள்; இவை இரண்டுமே சிகிச்சையை மேலும் கடினமாக்கும். இப்படி ஆண் சிகிச்சையை தாமதப்படுத்திக் கொண்டே போகும் கால விரயத்தில், பெண்ணின் வயதும் அதிகரிக்கிறது; இதன் காரணமாக, அவர்கள் தங்களது சொந்த விந்தணுக்கள் / கருமுட்டைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறையலாம்; இதனால் அவர்களது சொந்த மரபணுவுடன் கூடிய குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
தைராய்டு பிரச்சினை காரணமாக ஏற்படும் மலட்டுத்தன்மை, குறிப்பாக ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு பொதுவாக காணப்படுகிறது. கருவுறுதல் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு 10 பெண்களில் 4 பேருக்கு இந்த தைராய்டு நிலை கண்டறியப்படுள்ளது. இது அண்டவிடுப்பை (கருமுட்டை விடுவிப்பு) பாதிக்கிறது, மேலும் இது பெண்களுக்கு கருச்சிதைவையும் ஏற்படுத்தக்கூடும்.
இது குறித்து கோயம்புத்தூர், நோவா IVF கருத்தரித்தல் சிகிச்சை மையத்தின் மருத்துவ இயக்குனர் (கிளினிக்கல் டைரக்டர்) & கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் மீனாட்சி பிரியா அவர்கள் கூறுகையில், “கோயம்புத்தூரில், நாங்கள் இரண்டு பிரச்சினைகள் ஒருசேர இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்: அதிக நபர்களுக்கு நீரிழிவு மற்றும் தைராய்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன; அத்துடன், குழந்தையின்மை பிரச்சினைகளும் சேர்ந்து ஏற்படுகின்றன. பல தம்பதிகள் 40 அல்லது 45 வயதில்தான் நம்மிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்பது கவலை தரும் ஒன்றாகவே உள்ளது. இந்த வயதில், பெண்ணின் கருமுட்டைகளின் தரம் ஏற்கனவே குறைந்திருக்கும், மேலும் ஆணின் விந்தணுக்களின் ஆரோக்கியமும் குறைந்திருக்கலாம். இவை குழந்தைப்பேறு வாய்ப்புகளை நேரடியாக பாதிக்கிறது. 35 வயதுடைய தம்பதிகள் 6 மாதங்களாக கருத்தரிக்க முயற்சித்து முடியாத பட்சத்தில் அவசியம் சிகிச்சைக்கு வர வேண்டும்; 35 வயதிற்கு உட்பட்டவர்கள் 1 வருடத்திற்குள் கருத்தரிக்க முயற்சித்து இயலாத பட்சத்தில் அவசியம் சிகிச்சைக்கு வர வேண்டும்.” என்று கூறினார்.
ஒரே தம்பதியினருக்கு IVF சிகிச்சை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தோல்வியடைந்ததையும் மருத்துவர்கள் கண்டு வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளில், தம்பதிகள் பெண்ணின் கருப்பை அல்லது முட்டைகளில் பிரச்சினை இருப்பதாக கருதுகிறார்கள்; இருப்பினும், IVF சிகிச்சை மீண்டும் மீண்டும் தோல்வியடைவதற்கு கருவே (எம்ப்ரியோ) காரணமாக இருக்கலாம்.
கோயம்புத்தூரில் உள்ள நோவா IVF கருத்தரித்தல் மையத்தின், மருத்துவ இயக்குனர் & கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் லதா V அவர்கள் கூறுகையில், “IVF சிகிச்சை மீண்டும் மீண்டும் தோல்வியடையும் நிலை ஏற்பட்டாலோ, அல்லது ஒரு தம்பதியினருக்கு கருச்சிதைவு ஏற்பட்டாலோ, குரோமோசோம் அசாதாரணங்கள் இல்லாத சிறந்த கருவைத் தேர்ந்தெடுக்க உதவும் முன்கூட்டிய ப்ரீஇம்பிளான்டேஷன் மரபணு சோதனை போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். கருவை இடம் மாற்றுவதற்கான சிறந்த நேரம் எப்போது என்பதை தீர்மானிக்க எண்டோமெட்ரியம் சோதனைகளையும் தேவைகேற்ப நாங்கள் மேற்கொள்வோம். இதனால் கருவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். IVF சிகிச்சையில் தொடர் தோல்விகள் ஏற்படுவது தம்பதிகளை உணர்வு ரீதியாக பாதிக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; மேலும், அவர்கள் நம்பிக்கையையும் இழக்கிறார்கள்; எனவே, முடிந்தவரை ஒவ்வொரு தம்பதியினருக்கும் சிகிச்சையை அவர்களுக்கென பிரத்தியேகமாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
அவர்களில் பலர் பணிபுரியும் வல்லுநர்களாக தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள்; அதன் காரணமாக திருமணம் அல்லது குழந்தை பெறுவதை தாமதப்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்களுக்கான குடும்பத்தைத் தொடங்க முடிவு செய்யும் நேரத்தில், கருவுறுதலுக்கு ஏற்ற இளம் வயதை அவர்கள் ஏற்கனவே கடந்திருப்பார்கள். முட்டை உறைவித்தல், கரு உறைவித்தல் மற்றும் விந்தணு உறைவித்தல் போன்ற நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தம்பதிகளுக்குத் தேவைப்படுகிறது; அவற்றின் மூலம் அவர்கள் இளமையாக இருக்கும்போதே தங்கள் கருவுற உதவும் கூறுகளை பாதுகாக்கவும், பின்னர் கருத்தரிக்கும் வாய்ப்பினையும் பெறலாம்.
கோயம்புத்தூரில் உள்ள நோவா IVF கருத்தரித்தல் மையமானது, அதிநவீன ஆய்வகம் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு விரிவான கருத்தரித்தல் சிகிச்சை மையமாகும்; மேலும், இது கருத்தரிப்பு சிகிச்சைகளை வழங்குவதில் சர்வதேச தரநிலையைப் பின்பற்றுகிறது, மற்றும் குழந்தைப் பெற திட்டமிடும் தம்பதிகளை ஆரம்பகாலத்திலேயே கருவுறும் தன்மையை மதிப்பீடு செய்வதற்கு ஊக்குவிக்கிறது