C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டத்தில்
தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் (Certificate In Textile Painting, Dyeing & Printing Course),கலை (Master Certification In Bridal Makeup Artistry Course) சிகை அலங்காரம் (Diploma In Creative hair dressing chemical treatment Courses) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவித்துள்ளார்..
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு , (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) ஆகிய பயிற்சிக்கான கால அளவு நான்கு மாதங்களாகும். பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.50,000/-வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
(Master Certification in Bridal Makeup Artistry Course) அலங்காரம் ( Diploma in Creative hair dressing chemical treatment Courses) ஆகிய பயிற்சிக்கான கால அளவு 45 நாட்களாகும் பயிற்சியானது திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/-
வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.