திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது ;
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கம் ஜூன் 11 ; 2026 இன்று நடைபெறும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் கோகிலாசக்தி நேற்று தெரிவித்திருந்தார்,
அதனை அடுத்து இன்று தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஜூன் 11 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கூட்டரங்கில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்கே தலைமையில் நடைபெற்றது
இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் இயற்கை வேளாண்மை வல்லுநர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று தொழில்நுட்ப உரையாற்றினர்.
மேலும் இயற்கை வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் இடு பொருட்கள் குறித்து கண்காட்சியும் அமைக்கப்பட அமைக்கப்பட்டது. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பங்கேற்றனர்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.