ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமான , முதியோர் நல மருத்துவர் தலைமையிலான கோவையின் முதல் பராமரிப்பு மையத்தையும் (SNF) மற்றும் நீண்டகால சிகிச்சைக்கான மருத்துவமனையையும் இன்று தொடங்கியது. லுலு மாலுக்கு எதிரே, லட்சுமி மில்ஸ் ஜங்ஷனில் மையமாக அமைந்துள்ள இந்த 100 படுக்கைகள் கொண்ட மையம், முதியோரின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இசிஜி, எக்கோ, அல்ட்ராசவுண்ட், மருந்தகம், ஆய்வகம், தடுப்பூசிகள், பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு சேவைகளுடன், மூத்த குடிமக்களுக்கான ஒரு பல்துறை மூத்தோர் மருத்துவ வெளிநோயாளர் சிகிச்சை மையமாகவும் இந்த மையம் செயல்படும்.

இந்த மையம் கங்கா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜா சபபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவன தலைவர் திரு. G. சவுந்தரராஜன் மற்றும் சுகுணா குரூப் நிர்வாக இயக்குநர் திரு. V. லட்சுமிநாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஜெரி கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

2036-க்குள் இந்தியாவின் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 23 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாரம்பரிய மருத்துவமனை வசதிகளுக்கு அப்பால் விரிவான பராமரிப்பு மாதிரிகளுக்கான அவசர தேவையை அதிகரித்திருக்கிறது. மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள் வாழ்நாளை அதிகரித்திருந்தாலும், தீவிர மருத்துவமனை சிகிச்சை தேவையில்லாமல் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும் மறுவாழ்வும் தேவைப்படும் முதியோருக்கு பொருத்தமான பராமரிப்பைக் கண்டறிவதில் குடும்பங்கள் பெரும்பாலும் சிக்கலை எதிர்கொள்கின்றன. முதியோர் பராமரிப்பில்‘காணாமல் போன நடுநிலை’ (missing middle) எனப்படுகிற இந்த இடைவெளி இன்னும் சரியாகவும் முழுமையாகவும் கையாளப்படாத சவால்களில் ஒன்றாகவே உள்ளது.

முதுமை குறித்த அறிவியலில் சிறப்புப் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு ஜெரி கேர் மையம் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்குகிறது. துணை வாழ்வு வசதிகள், அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு, மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் மீட்சி, மறுவாழ்வு பராமரிப்பு, நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு பராமரிப்பு, ஆறுதல் வழங்கும் வலி தணிப்பு பராமரிப்பு , தற்காலிக நிவாரண பராமரிப்பு (respite care) மற்றும் பகல்நேர பராமரிப்பு சேவைகளை வழங்கி, மூத்தோர் மருத்துவத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் இது ஒரு முழுமையான நீண்டகால சிகிச்சை மருத்துவமனையாக செயல்படுகிறது.

மக்கள் நீண்ட காலம் வாழ்ந்து, அதிக சிக்கலான சுகாதாரத் தேவைகளுடன் வயதாகி முதுமை உடன் வாழ்வதால் , அர்ப்பணிப்புடன் கூடிய மூத்தோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் மூத்த குடிமக்கள் தொகை மற்றும் ஓய்வூதியர்களுக்கான இடமாக பெயர் பெற்றுள்ள கோவையில், இந்தத் தேவை மிகத் தெளிவாகவே தெரிந்தது. மூத்தோர் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற குழுக்களைக் கொண்டு, ஒரே கூரையின் கீழ் முழுமையான தொடர் பராமரிப்பை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப எங்கள் மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைவிட முக்கியமாக, தங்களின் அன்புக்குரிய முதியவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான பராமரிப்பைப் பெறுகிறார்கள் என்ற உறுதியை இது குடும்பங்களுக்கு அளிக்கும் ”என்று ஜெரி கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் தெரிவித்தார்.

கங்கா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜா சபாபதி கூறுகையில், “சிறப்பு மூத்தோர் பராமரிப்பு இனி ஒரு விருப்பத் தேர்வாக இல்லை — அது இன்றியமையாததாகி விட்டது. மருத்துவத் துல்லியத்தையும், மறுவாழ்வு மற்றும் நீண்டகால பராமரிப்பையும் இணைக்கும் ஒரு மையம், மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் இடையேயான முக்கியமான இடைவெளியை நிரப்புகிறது, இதுவே கோவை மாநகருக்கு தேவையாக இருந்தது,” என்றார்.

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவன தலைவர் திரு. G. சவுந்தரராஜன் கூறுகையில், “கோவை எப்போதுமே தன் சொந்த மக்களைக் கவனித்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் நகரம். முதியோர்களுக்கு மட்டுமே சேவை வழங்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனம், இந்த நகரத்தின் மதிப்பீடுகளை பிரதிபலிக்கிறது, இது இங்கு உருவாவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்,” என்றார். சுகுணா குரூப் நிர்வாக இயக்குநர் திரு. V. லட்சுமிநாராயணசாமி மேலும் கூறுகையில், “எங்கள் பெற்றோர்களும் முதியோர்களும் கண்ணியத்துடன் வயதாகி, தங்கள் அருகிலேயே நிபுணத்துவமான பராமரிப்பு கிடைக்கும் என்ற உறுதியைப் பெறத் தகுதியானவர்கள். ஜெரி கேர், எங்கள் பகுதிக்கு மிகவும் தேவையான, தொழில்முறை நிபுணத்துவத்துடன் முதியோர் பராமரிப்பை முன்மாதிரியாக கொண்டுவருகிறது,” என்றார்.

இனிமையான வானிலை, வலுவான சுகாதார வசதிகள், பலமான சமூக வலையமைப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றால், ஓய்வு பெற்றவர்களுக்கு கோவை நகரம் மிகவும் விருப்பமான இடமாக மாறியுள்ளது. மூத்த குடிமக்கள், ஓய்வூதிய சமூகங்கள் மற்றும் வயதான பெற்றோரிடமிருந்து தொலைவில் வாழும் குடும்பங்களிடமிருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட முதியோர் பராமரிப்புக்கான தேவை இந்த நகரில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவையில் தனது இந்த விரிவாக்கத்தின் மூலம், சிறப்பு மூத்தோர் பராமரிப்பை இப்பகுதி முழுவதும் மேலும் எளிதாகக் கிடைக்கச் செய்வதே ஜெரி கேரின் நோக்கம். இதன் மூலம் முதியோர்கள் கண்ணியத்துடனும், வசதியுடனும், சிறந்த வாழ்க்கைத் தரத்துடனும் முதுமையில் வாழ இது உதவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *