நீடாமங்கலம்., ஜூலை. 29

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆம்னி பேருந்தில் தஞ்சை மாவட்டம் கரம்பங்குடியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். நீடாமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பேருந்தை இயக்க விடாமல் மது போதையில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து ஓட்டுனர் ராஜ்குமாரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அவரை தாக்கினர். இதில் கண் தலை கை உள்ளிட்ட இடங்களில் ராஜ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ராஜ்குமாரை ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதுர உள்ளிட்ட மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரை மதுபோதையில் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *