பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நகர்புறத்தை பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலைகளில் மையப்பிரிவு பகுதிகளில் அழகு தரும் வண்ண வண்ண மலர்கள் பூக்கும் செடிகளை நடவு செய்தல் பணி பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் விதை அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி பட்டுக்கோட்டை வடசேரி சாலை ரவுண்டானா பகுதியில் தொடங்கப்பட்டது

பணியை நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் நகராட்சி ஆணையர் கனிராஜ் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம் மேலாளர் அன்புச்செல்வி துப்புரவு ஆய்வாளர் மகாமுனி விதை அறக்கட்டளை நிறுவன சக்தி காந்தன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *