கோவை
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நடுவர்களால் சிறப்பாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், மண்டலம் பி-க்குட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள்இப்போட்டியில் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி ஒட்டுமொத்தப் பிரிவில் 355 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியது.


மாணவர்கள் – 34 தங்கப்பதக்கங்களும், மாணவிகள் – 26 தங்கப்பதக்கங்களும் என மொத்தம் 60 தங்கப் பதக்கங்களை வென்றனர்.மாணவர்கள் 23 வெள்ளிப் பதக்கங்களும்,, மாணவிகள் 22
வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றனர்.


மாணவர்கள் – 16 வெண்கல பதக்கங்களையும், , மாணவிகள் – 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 23 வெண்கல பதக்கங்களை வென்றனர்.இத்தொடரில் 7 மாணவர்கள் மற்றும் 5 மாணவிகள் என மொத்தம் 12 பேர் முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்தனர்: மாணவர்கள் பிரிவில்,லோகமித்ரன் செல்வராஜ் (ஜூனியர்) – ஹேமர் எறிதல் (32.81 மீ) மற்றும் ஈட்டி எறிதல் (36.80 மீ),தன்வந்த் ராஜா (ஜூனியர்) – 1500 மீ ஓட்டம் (4:40:00 நிமிடங்கள்),
கிருத்திக் (ஜூனியர்) – 5 கி.மீ நடத்தல் (31:08:96 நிமிடங்கள்),சபரிஷ் பிரணவ் ராஜா (ஜூனியர்) மும்முனைத் தாண்டுதல் ( 12.27 மீ), ரித்விக் ராகுல் (சீனியர்) – 5 கி.மீ நடத்தல் (29:13 நிமிடங்கள்),
வைஷ்ணவ் சர்வின் (சீனியர்) – 110 மீ தடைதாண்டும் ஓட்டம் (16.40 வினாடிகள்) என சாதனை படைத்தனர்.


மாணவிகள் பிரிவில்,சிந்து வர்ஷினி (சப்-ஜூனியர்) – 80 மீ தடைதாண்டும் ஓட்டம் (15.14 வினாடிகள்)
ஆராத்தியா (சப்-ஜூனியர்) – நீளம் தாண்டுதல் (4.49 மீ),விவிதா சிவகுமார் (ஜூனியர்) – நீளம் தாண்டுதல் (4.79 மீ),பூர்விகா (சீனியர்) – ஹேமர் எறிதல் (36.85 மீ) மற்றும் குண்டு எறிதல் (9.62 மீ) ஆகியவற்றில் சாதனை படைத்தனர். விழாவில் ஜி.டி. பள்ளியின் முன்னாள் மாணவரும், தொடர்ச்சியாக 4 முறை இந்திய தேசிய டூரிங் கார் சாம்பியன் பட்டம் வென்ற பிரபல ரேஸ் வீரருமான அர்ஜுன் நரேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.


வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன்,பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமிதத்துடன் வாழ்த்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *