செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.


தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுச் செயலாளரும்
ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான என்.ஆனந்த் ஆலோசனைப்படி செங்கல்பட்டு தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.கே.மோகன்ராஜ் தலைமையில் சித்தாமூர் மேற்கு ஒன்றிய தலைவர் ப்ரியமுடன் எம்.துரை முன்னிலையில் சித்தாமூர் மேற்கு ஒன்றியம் இரும்புலி கிளை சார்பாக நேற்று காலை 08:00 மணி அளவில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

பின்பு முகாமில் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட இணை செயலாளர் தெறி கோகுல் மாவட்ட பொருளாளர் வி.கே.கிருஷ்ணபிரசாத் சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ் இரும்புலி கிளை நிர்வாகிகள் ராஜா, மாரி, ஜெகதீசன், ஏழுமலை, திருநாவுக்கரசு, சதா, மூர்த்தி,பிரகாஷ், லட்சுமணன், சதிஷ்,உட்பட மருத்துவர்கள் காவல்துறையினர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *