கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டும் திருவையாறு கிளை நிறுவனமாக கொண்டும் செயல்பட்டு வரும் வீனஸ் கல்வி நிறுவனம் ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியை சிறப்பாக வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் மேலும் சிறப்பு அம்சமாக கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது தளத்தில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமதி. உஷா சேகர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள்.முன்னதாக வீனஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் என் மணிகண்டன் வரவேற்றார்.
இவ்விழாவில் ஏவிஎம் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் ஏவிஎம் ஹீமாயூன் கபீர், வழக்கறிஞர் சாலியா கார்த்திக், காமராஜர் பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன், பாணா துரை பள்ளி தமிழ் ஆசிரியர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் என் நிறுவனத்தின் அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்