திருவெற்றியூர். ஜூன். 19
மணலி, மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது மண்டலக்குழு அலுவலர் செந்தில் குமரன் செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் த. வே. கா. கவுன்சிலர் முல்லை. ராஜேஷ் மன்ற கூடத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் அருகே முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் படம் இருப்பதை சுட்டிக்காட்டி அதை வேண்டாம் என்றார். மண்டல குழு தலைவர் ஆறுமுகம் முன்னாள் முதல்வர் என்ற முறையில் எங்களது தலைவரின் புகைப்படமும் கூடத்தில் இருக்கும் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம் என கூறிய நிலையில்.வேண்டுமென்றால் மண்டல குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் படங்களைக் கொண்டு வந்து அவரவர் மாட்டிக் கொள்ளலாம் என்று மண்டல குழு தலைவர் தெரிவித்தார் இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் துரை சார்ந்த அதிகாரிகள் எந்த ஒரு பணியையும் செய்வதில்லை என்றும் திட்டப் பணிகள் மந்தமான சூழ்நிலையே நடைபெற்று வருவதாகவும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர் பின்னர் 154 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.