நாகப்பட்டினம் மாவட்டம்: திருக்குவளை வட்டம்: தெற்கு வெளி கிராமத்தில் தொடர்ச்சியாக குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தவறிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருக்குவளை தெற்கு தெரு சமூக சேவகர் G. சண்முகராஜ் முன்னிலையில் நடைபெற இருந்த நிலையில் திருக்குவளை உட்பட்ட தெற்குவெளி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் போடப்பட்ட வீட்டு குடிநீர் இணைப்பில் குடிநீர் வராதது குறித்து திருக்குவளை தெற்கு தெரு G.சண்முகராஜ் சமூக சேவகர் மற்றும் தெற்குவெளி பகுதி பொதுமக்களுடன். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், காவல்துறை துணை ஆய்வாளர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோரது முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தெற்குவெளி செல்லும் தெருமுனையில் பொதுமக்கள் குடிநீர் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக நான்கு குடிநீர் குழாய்கள் தற்காலிகமாக அமைத்திட ஒத்துக் கொள்ளப்பட்டது மேலும் ஒரு வாரத்திற்குள் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் வழங்கப்பட்ட தனி நபர் வீட்டு குடிநீர் இணைப்புகள் மீண்டும் சரி செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஜேசிபி வர வைக்கப்பட்டு நான்கு குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.