தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சுந்தர வளவன் அறிக்கை

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) காரணமாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஓய்வூதியப் பாதுகாப்பு குறித்த அச்சமும், எதிர்கால வாழ்வாதாரம் குறித்த கவலையும் தொடர்ந்து இருந்து வந்தது.
இதன் காரணமாக கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் தொடர் கோரிக்கை இயக்கங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான செயலாக்க வழிமுறைகளை தமிழக அரசு 16.06.2026 அன்று அரசாணையாக வெளியிட்டிருப்பது அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்கு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இந்த அரசாணையின் மூலம் ஓய்வூதியப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள இந்த முன்னெடுப்பை தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கம் மனதார வரவேற்கிறது.
பல ஆண்டுகளாக ஓய்வூதிய உரிமைக்காக போராடி வந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் உணர்வுகளை மதித்து, நடைமுறை சாத்தியக்கூறுகளுடன் தீர்வை நோக்கி முன்னேறியுள்ள தமிழக அரசுக்கும், முதலமைச்சர். ஜோசப் விஜய் அவர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் வெளிப்படைத்தன்மையுடனும், எளிமையான நடைமுறைகளுடனும் அனைத்து தகுதியுடைய ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

ஓய்வூதியப் பாதுகாப்பு என்பது அரசு அலுவலர்களின் அடிப்படை சமூகப் பாதுகாப்பாகும். அந்த அடிப்படையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை முன்னிறுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு விரைவில் அறிவிக்கும் என பெரிதும் நம்புகிறோம். பழைய ஓய்வூதிய திட்டம் ( GPF) நடைமுறைக்கு வரும் வரை, TAPS திட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து தேவைக்கேற்ப, GPF திட்டத்தில் உள்ளது போல முன்பணமாக பெறும் வசதி வழங்கப்பட வேண்டும் எனவும், இதனால் அவசர கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு உருவாகும். இந்த நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு அலுவலர்களின் இறுதி இலக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ( GPF) என்பதால் தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுமாறு வேண்டுகிறோம்.என தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *