மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் வழி காட்டுதலின்படி போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக 10,11,12 வகுப்பு மாணவர் களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்குப் பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) அறிவழகன் தலைமை வகித்தார்.
நிகழ்விற்கு ஒருங்கிணைப்பாளர்,தமிழாசிரியர் கார்த்திக் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய் “தனிமனித மாற்றம் சமூக மாற்றம்” என்னும் தலைப்பில் ஒழுக்கம், நன்னடத்தை, போதை ஒழிப்புப் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி “போதை ஒழியட்டும் பாதை மலரட்டும்” என்னும் தலைப்பில் மாணவர் களிடையே விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.மாணவர் சாரதி நன்றி கூறினார். நிகழ்வில் 500 மாணவர்கள் போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பள்ளியின் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.