கோவை

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன பதாகைகளை ஏந்தி தமிழக அரசை கண்டித்தும் தமிழகஅரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டன.

இது குறித்து பேட்டி அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் மாநிலச் செயலாளர் முகமதுஒலி, பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழகம் என்பது ஒரு காலத்தில் அமைதி பூங்காவாக இருந்து வந்ததாகவும் ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்காக எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்தார்.

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை, கும்மிடிப்பூண்டி மூன்று வயது குழந்தை பாலியல் வனப்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது ஆகியவற்றை குறிப்பிட்ட அவர் இது போன்ற செய்திகள் தொடர்ந்து வருவதாகவும் சில நேரங்களில் வழிபாட்டுத் தலங்களிலேயே பெண்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பெண்கள் செல்லும் பொழுது பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர் நாளுக்கு நாள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இப்படியே சென்றால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்காது என்று தெரிவித்தார் இது குறித்து மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது ஆனால் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலரே மூன்று பேரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை கொண்டுவரப்பட்டாலும் அதில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றார்

நாங்கள் இப்பொழுது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் எங்களுக்கு சில நாட்கள் தேவைப்படும் என்று இந்த விஷயத்தில் கூறினால் இவரே அப்பாவி குழந்தைகள் உயிர் பறிபோவதற்கு வாய்ப்பாக இருப்பார் என்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *