மதுரையில் கொட்டும் மழையில் மத்திய அரசுக்கு எதிராக சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வு, 100 நாள் வேலைத் திட்டம், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்கவும், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்பு களை திரும்பப் பெறவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் புதூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு இரண்டாம் பகுதி குழு செயலாளர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்
களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு சட்டத் தொகுப்பு களையும் மத்திய அரசு கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை எதிர்த்து மக்களை ஒருங்கிணைத்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நரசிம்மன், ரமேஷ், ஸ்டாலின், பாலசுப்பிரமணியம், கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதி குழு செயலாளர்கள், கிளைச் செயலாளர் கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *