திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக வணிக வளாகம் கட்ட முந்தைய திமுக அரசு நிதி ஒதுக்கியது. அப்போதைய திமுக அமைச்சர் எ.வா வேலு அவர்கள் அடிக்கல் நாட்டில் பணியை துவங்கி வைத்தார்.
பக்தர்களுக்கு அடிப்படையான வசதிகளை செய்து தராமல் வியாபார நோக்கில் வணிக வளாகம் கட்டுவதற்கு பக்தர்களும் ஆன்மீகவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரின் பரிந்துரையை அரசு பரிசீலனை செய்தது. அதனை அடுத்து அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக 6.40 கோடி செலவில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் சட்டமன்ற அறிவிப்பிலிருந்தும் நீக்கம் செய்தது தமிழக அரசு, இதனை பொது மக்களும், பக்தர்களும் வரவேற்றனர்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.