கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் 16-வது நினைவு தினத்தை முன்நாட்டு ஒரு ரூபாய் உணவு திட்டம் சென்னையில் விரிவு படுத்தப்பட்டது சென்னையில் நடைபெற்ற முதன்மை நிகழ்ச்சியில், ஆர்.கே. தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலேஷ் குமார் கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, தெய்வேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனங்களின் ஊழியர்களும் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.இதனை தொடர்ந்து,ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,”சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆர். தெய்வேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தினசரி ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.
ஒரு ரூபாய் உணவுத் திட்டம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என சென்னை வாழ் மக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், மார்த்தாண்டம்பட்டியில் அமைந்துள்ள ஆர். தெய்வேந்திரன் நாடார் நினைவிடத்தில் அறங்காவலர் ரத்தினமாலா ராஜேஷ் குமார், ஆதித்யா ராஜேஷ் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மலரஞ்சலி செலுத்தி, சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.