கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் மகன் திருமண நிச்சயதார்த்த விழா
கல்பாக்கம் ஜூன் 20
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவரும் புரட்சி பாரதம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாக செயல்பட்டு வருபவர் கே.பி சகாதேவன் இவரது துணைவியார் இலட்சுமி அம்மாள் இந்த தம்பதியரின் இளைய மகன் பொறியாளர் டில்லி பிரகாஷ் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சியைச் சேர்ந்த அண்ணாதுரை அமுல் தம்பதியினரின் மகள் பொறியாளர் ஷேசாடில்லி பிரகாஷ் – ஷேசா திருமண நிச்சயதார்த்த விழா 18 ஆம் தேதி அன்று புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் கே பி சகாதேவன் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் உறவினர்கள் நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்