டேக்வாண்டோ மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி; மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கல்பாக்கம் ஜூன் 20
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பின் முதலாம் ஆண்டு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் டேக்வோண்டா சார்பில் விரைவில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் அமெச்சூர் டேக்வாண்டோ போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஆர். மோகனகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாஸ்டர் எம். உதயகுமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் டாக்டர் ஆர்.தேசிங்கு ராஜன் முன்னிலை வகித்தார்.


இதில் அமெச்சூர் செங்கல்பட்டு டேக்வாண்டோ போர்ட்ஸ் அசோசியேஷன் சார்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயிற்சி பெறும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 3 லட்சம் மதிப்புள்ள இலவச காப்பீடு வசதி ஏற்படுத்துதல், வரும் ஜூலை மாதம் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் மாநில அளவில் டேக்வாண்டோ போட்டி சிறந்த முறையில் நடத்துதல், மாணவர்களுக்கு 7 லட்சம் மதிப்புள்ள சென்சார் பட்டை பயன்படுத்துதல், தேசிய அளவில் முதலாம் இடத்தில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இலவச கல்வி வழங்குதல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நடப்பாண்டில், எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் 4 மாணவர்களுக்கு மேற்கண்ட தீர்மானத்தின் படி இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு டேக்குவாண்டோ அகாடமி, பயர் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப், யூனிட்டி டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப், தாம்பரம் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப், டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப், டெபண்டர் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய சங்கங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *