பேராவூரணி – ஜூன் 20.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ரா.ராகுல்காந்தியின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், பிஸ்கெட் ஆகியவை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி அமலா, ஆசிரியை குழந்தையம்மாள், காங்கிரஸ் நிர்வாகிகள் எம். ஜேம்ஸ் ,பி. கிருபைராயப்பன் மற்றும்
மளிகை வே.பெல்தாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் ஜே. அருள்சுபாஷ் செய்திருந்தார்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்