அரியலூரில் திமுகவினர் சாலை மறியல் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் அரியலூர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் மாவட்ட திமுக துணைச் செயலாளர் சாமிநாதன் மத்திய ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராசன் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு நகராட்சி துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி நகராட்சி கவுன்சிலர்கள் குணா சத்யா பரமேஸ்வரன் முன்னாள் கவுன்சிலர்கள் மாலாதமிழரசன் மா ராஜேந்திரன் திருமானூர் ஒன்றிய திமுக செயலாளர் கென்னடி செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் எழில்மாறன் முன்னாள் அரசு வழக்கறிஞர் த.ஆ.கதிரவன் மற்றும் சாஸ்திரி நகர் ஆனந்த் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார் துணை அமைப்பாளர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் மறியலில் கைதானார்கள்