உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் மத்திய, கிழக்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

துறையூர் ஆக-04
திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


ஆகஸ்ட் 03 அன்று தஞ்சையில் திமுக விவசாயிகள் அணி சார்பில் காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி தஞ்சை போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று உதயநிதியை கைது செய்து தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் துறையூரில் கிழக்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுகவினர் அண்ணாதுரை,சிவ சரவணன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன், உதவி காவல் ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மாலையில் விடுவித்தனர்.இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபா, மாணவரணி பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் நடுவலூர் ஜெயராமன், உமாபதி ,நரசிங்கபுரம் தளபதி கதிரேசன், இளைஞர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஸ்டீபன், ரோந்து காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஏற்ப்பட்டது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *