தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு.

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ருத்திரகுமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுகுமார் மற்றும் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத் அம்மன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்.

பாலியல் வன்கொடுமை போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இவற்றை பொறுப்பேற்ற அரசு கட்டுப்படுத்தவில்லை பொதுமக்கள் நிறைய எதிர்பார்ப்புடன் வாக்களித்தார்கள். குழந்தைகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க சொல்லி பெற்றோர்களை வற்புறுத்தியதன் அடிப்படையில் வாக்களித்தார்கள் ஆனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளது. டிஜிபி வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இன்ஸ்பெக்டர் அளவில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

மேட்டூர் அணையை திறக்கவில்லை என்ற கேள்விக்கு, தமிழக வெற்றி கழகத்தில் காங்கிரஸ் கட்சி இணைந்ததால் அவர்களுக்கு இரண்டு எம்பி சீட் கொடுத்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகாவில் ஆட்சி அமைத்து வருகின்றனர் மேலும் அவர்கள் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு இப்போது உள்ள அரசு எதிர்ப்பு தெரிவித்து மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என கூறலாம் காங்கிரஸில் உள்ள எம்பிக்கள் இது பற்றி மேல் இடத்தில் பேசி நடவடிக்கை எடுக்கலாம் அவ்வாறெல்லாம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

தாராபுரத்தில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என கேட்டபோது, இது பற்றி மத்திய அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் மேலும் இது குறித்த மனுவினை மாவட்ட தலைவரிடம் கொடுங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *