தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அரசு பஸ் சரியான பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு. சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை குண்டுகட்டாக கைது செய்ய முயற்சி. தாராபுரத்தில் பரபரப்பு.
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 43. இவருக்கு 8 வகுப்பு மாணவி கீர்த்தி உள்ளார். இவர் வழக்கம் போல் தேர்பட்டி பிரிவில் இருந்து காலை அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை நேரத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக தாலுகா ஆபிஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து பழனி செல்லும் அரசு பஸ்ஸில் பயணம் செய்வதற்காக ஏறினார்.
இவர் வழக்கமாக அங்கிருந்து ஏறி மீண்டும் தனது ஊரான தேர்பட்டி பிரிவு என்ற இடத்திற்கு வந்து இறங்குவது வழக்கம். ஆனால் நேற்று மாலை இந்த மாணவி ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ்ஸில் ஏறினார். ஆனால் பேருந்தில் ஏறிய மாணவி தேர்பட்டி பிரிவுக்கு டிக்கெட் கொடுக்குமாறு நடத்துனரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த நடத்துனர் உனக்கு பயண சீட்டு கொடுக்க முடியாது என ஒருமையில் பேசியதாகவும் இரண்டு கிலோமீட்டருக்கு முன்னதாக நளினி கல்லூரி என்ற இடத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டு அந்த மாணவியை பஸ்ஸிலிருந்து இறங்கச் சொல்லி கூறியதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி அங்கிருந்து அருகில் இருந்த ஒருவரிடம் செல்போனை வாங்கிக் கொண்டு இவரது தந்தைக்கு தொலைபேசியில் நடந்ததை கூறினார்.
அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த மாணவியை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
சம்பவம் பற்றி அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பழனியில் இருந்து ஈரோடு நோக்கி செல்வதற்காக இருந்த அரசு பேருந்து சிறை பிடிப்பதற்காக பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் அந்த அரசு பஸ் தேர்பட்டி வழியாக தாராபுரத்திற்கு வரவில்லை. இந்த சம்பவத்தை அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சிவகுமார், தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் எட்டப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதை எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களை போலீசார் எச்சரித்து கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் இந்த பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் இருப்பதற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். நாளை காலை தாராபுரம் போலீஸ் நிலையத்தில் பஸ் நிற்கவில்லை என புகார் அளிப்பதாகவும் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.