செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.பாலாஜி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆலோசனைப்படி வழக்கறிஞர் சம்பத் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சம்பத் தலைமையில் உத்தமநல்லூர் ஊராட்சியில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நூறாண்டு காலம் நீடூடி வாழ வேண்டி கேக் வெட்டி சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் சதாசிவம் நாகராஜ் சுப்பிரமணி சுரேஷ்குமார் நாகப்பன் பொன்னையன் செல்வம் பெருமாள் வாசு மனோஜ் வெங்கடேசன் நவீன் சுரேஷ் பாபு ஐயப்பன் ராஜேஷ் செல்வம் ராஜீவ்காந்தி உள்ளிட்ட தவெக ஒன்றிய நிர்வாகிகள்
பலர் கலந்து கொண்டனர்.