முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் துறையூரில் தவெக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மனநலம் குன்றிய மாணவர்களுக்கு காலை உணவு
துறையூர் மார்ச் -21
திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர்கள் அணி சார்பில் 52வது பிறந்தநாள்(ஜீன்-22) விழா 21/06/2026 அன்று, திருச்சி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட கழக செயலாளர் ஜெகன் மோகன் ஆலோசனையின் பேரில் துறையூர் தவெக வழக்கறிஞர்கள் அணி சார்பில் வழக்கறிஞர் செல்லதுரை ஏற்பாட்டில் குட்டக்கரையில் உள்ள தி ஸ்பாஸ்டிக்ஸ் ஆஃப் திருச்சிராப்பள்ளி,துறையூர் கிளை மையத்தில் உள்ள மனம் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட இணை செயலாளர் மதன் தலைமையில்
காலை உணவு (இட்லி,பூரி,பொங்கல், கேசரி) வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தமிழ் நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் . இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் வினோத், சூர்யா, தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் வழக்கறிஞர்கள் அணி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நிர்மல், தொகுதி பொறுப்பாளர் நாகராஜ்,ஜீவல் சதா, வழக்கறிஞர்கள் ஜெயபால், விக்னேஷ் மற்றும் சௌந்தரராஜன், போக்குவரத்து தொழிற்சங்கம் செந்தில், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் காப்பக நிர்வாகி சூரியா, ஆசிரியைகள் , மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜமீந்தார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை துவக்கி வைக்க வருகை தந்த தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு வழக்கறிஞர் செல்லதுரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்