முதல்வர் பிறந்த நாள் விழா: பொதுமக்களுக்கு இலவச இணையவழிப் பதிவு சிறப்பு முகாம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா முன்னிட்டு கும்பகோணம் தமிழ் வெற்றி கழகம் சார்பில் பெண்கள் கல்லூரி எதிரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இலவச ஆன்லைன் சிறப்பு முகாம், நீர்மோர், மற்றும் அன்னதான நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்.மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் ரவி,கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோரின் ஆலோசனைப்படி பகுதி செயலாளர் சகாபுதீன் ,
42 வது வார்டு செயலாளர் தி.பாண்டி ஆகியோர் தலைமையில் அங்கன்வாடியில் இலவச ஆன்லைன் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில்
தொழிற்சங்க நல்வாரியம், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ,ஆகியவை பதிவு செய்யப்பட்டது. இதில் 500ற்கு மேற்பட்ட வார்டு மக்கள் பயனடைந்தனர்.
தொடர்ந்து செல்வகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது