கரூர் செய்தியாளர் மரியான் பாபு


மாநில அளவிலான மாபெரும் சிலம்ப பேரணி நடைபெற்றது ..


தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு,தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் பிரதீப் ராஜே உத்தரவின் படி தமிழ்நாடு
கரூர் மாவட்டம் சுங்க கேட் முதல் தாந்தோன்றிமலை அரசுகலை கல்லூரி வரை நடைபெற்ற பேரணியை கரூர் தவெக மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் மலையப்பசாமி மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதுகுறித்து சிலம்பாட்ட கழகம் மற்றும் சிலம்பம் கரூர் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,சிலம்பக் கலையின் வளர்ச்சி போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் பேரணி நடத்தப்படுகிறது என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *