சென்னையில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழாவில் அமைச்சருக்கு வீரவாள் பரிசு வழங்கிய வாணியர் சங்க மாவட்ட தலைவர்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ முன்னிலை வகித்தார் இந்த விழாவில் தமிழக வெற்றி கழக கம்பம் எம்.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத் தலைவரும் தேனி மாவட்ட வாணியர் சங்க தலைவருமான ஆர் சுந்தர வடிவேல் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு வீரவாள் பரிசளித்தார்.