தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை இராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம் செய்யப்பட்டது,


இந்நிகழ்வில் சில்க் வில்லேஜ் ஆராய்ச்சி மைய நிறுவனர் கைத்தறி முருகேசன் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் படத்தை வைக்க கோரிக்கை வைத்தும் பல ஆண்டுகளாக நலிவடைந்துஉள்ள நெசவாளரின் வாழ்வாதாரத்தை உயர்த்த கோரியும் கோரிக்கை வைத்தனர்.


இது போன்ற படம் உருவாக்க கைத்தறியில் ஜக்காடு தொழில்நுட்பம் முறையில் ஐந்து நாட்களாக நெசவு செய்யப்பட்டு உருவாக்கப்படும். இதே போன்று எந்தவிதமான புகைப்படங்களை கொடுத்தாலும் கைத்தறையில் நெசவு செய்து தரப்படும்.மேலும் நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள் முதல்வர் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *