பொள்ளாச்சி
ஆகஸ்ட் 9
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கடந்த 69 ஆண்டுகளில் எண்ணற்ற திறமைசாலி மாணவர்களை உருவாக்கி உள்ளது நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் சிறப்பு பெற்ற கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெற்றது
கல்லூரி முதல்வர் அசோக் வரவேற்பு உரை ஆற்றினார் என் ஐ ஏ கல்லூரி நிறுவனங்களின் இணைச்செயலாளர் கோவிந்தசாமி மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஒழுங்குமுறை தலைவரும் கல்லூரியின் முன்னாள் மாணவரான முத்துக்குமார் மாணவர்களிடையே உரையாற்றும் போது தொழில் துறையில் வெற்றி பெற ஒழுக்கம் மற்றும் கற்றல் அவசியம் எனவும் முன்னாள் மாணவரான தான் இதே கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று உரையாற்றினார்
அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற 391 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் சிறந்த மாணவர்கள் 15 பேருக்கு தங்கப் பதக்கங்களும் 15 மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டது விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு துறை துணைத் தலைவர் ரமேஷ் குமார் அழகப்பா ஆறுமுகம் மைக்கேல் ஞானராஜ் கல்லூரி செய்தி தொடர்பு துறை அலுவலர் நாகராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றோர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பட்டம் பெற்ற மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வம் உறுதிபாட்டை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்