திருவள்ளூர், மணவாள நகர்:

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கிளை சார்பில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா 08.08.2026 அன்று காலை முதல் மதியம் வரை வெகு பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நிறுவனர் / தேசிய தலைவர் மு.ரா அரவிந்தன் அவர்களின் ஒப்புதலுடன் தேசிய பொது செயலாளர் நந்தகுமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஏழுமலை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மணவாள நகர் கிளை தலைவர் ரமேஷ் முன்னிலையிலும், மணவாள நகர் கிளை செயலாளர் சந்தோஷ் முன்னிலையிலும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 100 நபர்களுக்கு படிப்பு உபகரணங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 1,500 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதேபோல், சமூகத்தில் ஆதரவின்றி மற்றும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் முதியோர்களுக்கும்,ஏழை குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.சாலையோர வியாபாரிகள் 20 நபர்களுக்கு குடையும் வழங்கப்பட்டது .

பெண்களுக்கு உதவும் வகையில் 500 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன மேலும், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில், 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டன.

தொடக்க விழாவில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் தேசிய நிர்வாகிகள் , மாவட்ட,கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் சமூக சேவைப் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவதோடு, “பணிகள் பல இருப்பினும்! திருப்பணி செய்வோம்!!” என்ற உயரிய நோக்கத்துடன் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை மென்மேலும் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து பொது சேவை செய்வோம் என உறுதியளித்தனர்.

மணவாள நகர் கிளை சார்பில் நடைபெற்ற இந்த இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, ஆன்மிகம், சமூக சேவை, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுநலப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

வடசென்னை,தென்சென்னை,விழுப்புரம்,கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி,ஒசூர் போன்ற மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சேவை புரிந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *