தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காதணி வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிச்சி பகுதி மகளிர் அணி அமைப்பாளர் ரேஷ்மா தலைமையில் நடைபெற்ற இதில்,இணை அமைப்பாளர் ஜூலி கமலா ராணி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தீபா,கலந்து கொண்டு இன்று புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களிடம் தங்க காதணியை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி செயலாளர் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, குழந்தைகளுக்கு தங்க காதணிகளை வழங்கினர்.

பின்னர் பேசிய நிர்வாகிகள், முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சமூக நலன் சார்ந்த சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த உதவியை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *