குடந்தை காவேரி சங்கம் அறக்கட்டளையின் சார்பில் புதிய பயிற்சி மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா. கருப்பூர் ஆற்றங்கரை அவென்யூ நகரில் நடைபெற்றது.
இதற்கான பூமி பூஜை விழாவிற்கு மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் சக்கரபாணி கட்டிட குழு தலைவர் டாக்டர் ராஜா ரகுபதி, கட்டிட குழு பொருளாளர் சுந்தராஜன், அறக்கட்டளையின் தலைவர் . மோகன் செயலாளர் பன்னீர்செல்வம் ,பொருளாளர் ரமேஷ் மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சங்க அரிமா நண்பர்கள் உட்படபலர் பங்கேற்றனர்